மனித உரிமை பேரவையின் உயர் மட்ட குழு வருகை!



 இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து நேரில் கண்டறிவதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின்  உயர் மட்ட குழுவொன்று அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் ஆசிய பசுபிக் பிரிவிற்கான தலைவர் ரொனி முங்கொவன் தலைமையிலான  குழுவினர் இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் குழுவினரின் அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் 51வது அமர்வில் புதிய மனித உரிமை ஆணையாளர் அல்லது இடைக்கால ஆணையாளர் சமர்ப்பிப்பார்.

இந்த அறிக்கையை தயாரிப்பதில் முக்கிய நபராக ரொனிமுங்கொவன் காணப்படுவார் என தெரிவித்துள்ள இராஜதந்திர வட்டாரங்கள் அவர் முக்கிய விடயங்கள் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார் என தெரிவித்துள்ளன.

ஜெனீவாவில் இலங்கை தொடர்பான பிரேரணைக்கு அனுசரனை இணை அனுசரணை வழங்கிய நாடுகள் கொழும்பிலும் ஜெனீவாவிலும் சந்தித்து  இலங்கை குறித்த புதிய தீர்மானம்  ஆராய்ந்துள்ளன.

மனித உரிமை பேரவையின் அமர்வு செப்டம்பர் 12ம் திகதி ஆரம்பமாகி  ஒக்டோபர் ஏழுவரை இடம்பெறும்.


No comments