மின்வெட்டு தொடர்கின்றது:நுரைச்சோலை இணைகிறது!

 


இலங்கையில் இரவு பகலென மூன்று மணிநேர மின்வெட்டு தொடர்கின்றது.

இந்நிலையில்  நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் திடீரென செயலிழந்த முதலாம் மின் பிறப்பாக்கியை எதிர்வரும் திங்கட்கிழமை (29) முதல் தேசிய மின் கட்டமைப்பில் இணைத்துகொள்ள முடியும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இதன்படி, 300 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments