நாள் தோறும் மீட்கப்படும் சடலங்கள்?யாழ்ப்பாணம் நகரில் அமைந்துள்ள புதிய சந்தை கட்டடத் தொகுதிக்குள் ஆண் ஒருவரின் சடலம் கண்டறியப்பட்டுள்ளது.

இன்று காலை குறித்த சடலம் அவதானிக்கப்பட்டு யாழ்ப்பாணப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சடலத்தை மீட்டு அடையாளம் காணும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இதனிடையே கெஸ்பேவ பொல்கஸ்ஓவிட்ட பிரதேசத்தில் உள்ள கால்வாய் ஒன்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் அவசர இலக்கத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இறந்தவரின் அடையாளம் இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில், அவர் 5.06 அடி உயரம் கொண்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் பச்சை நிற சாரம் அணிந்திருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.No comments