கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் வத்தளையில் சடலம்!காலிமுகத்திடலை அண்மித்து சடலங்களை கரை ஒதுங்கியிருந்த நிலையில் வத்தளையில் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

 வத்தளை, திக்கோவிட்ட கடற்கரையில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் குறித்த சடலம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 35 - 40 வயதுடையவர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

No comments