ஆர்மீனியாவில் பட்டாசு வெடித்ததில் சந்தை எரிந்து நாசம்: 5 பேர் பலி: 60 பேர் காயம்!


ஆர்மீனிய தலைநகர் யெரெவனில் உள்ள பிரபலமான சந்தையில் களஞ்சியப் படுத்திய பகுதியில் பட்டாசு வெடித்து எரிந்ததில் சந்தை முற்றாக எரிந்து நாசமானது.

இந்த அனர்த்தத்தில் 6 பேர் உயிரிழந்ததுடன் 60 பேர் காயமடைந்தனர். மேலும் 19 பேரைக் காணவில்லை.

சந்தைப் பகுதியில் பெரும் தீ மூட்டமாக எரிந்து என்று நாட்டின் அவசரகால சூழ்நிலைகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.   

காணாமல் போனவர்கள் வெடிப்பால் அழிக்கப்பட்ட கட்டிடத்தின் இடிபாடுகளில் அவர்கள் இன்னும் சிக்கியிருக்கலாம் என்று உறவினர்கள் நம்புகின்றனர்.  

மீட்புப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இன்னும் வெடித்துக்கொண்டிருக்கும் பட்டாசுகளுக்கு மத்தியில் தேடிவருகின்றனர்.

No comments