குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் ?

 


இலங்கையில்  ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக நீர் விநியோகப் பணியாளர்கள் கடமைக்கு சமுகமளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நீர் வழங்கல் வடிகாலமைப்பு ஊழியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயற்பாடு தடைப்பட்டுள்ளதுடன், குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக சங்கம் எச்சரித்துள்ளது.

No comments