ஐரோப்பாவில் கடும் வெம்பம்! ஐக்கிய இராச்சியத்தில் சிவப்பு எச்சரிக்கை!


ஐரோப்பா, வட ஆபிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவை கடுமையான வெப்பம் தாக்கியுள்ளது. பல இடங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் (104 டிகிரி பாரன்ஹீட்) க்கு மேல் அதிகரித்து.

தென்மேற்குப் பபிரான்ஸ் காட்டுத்தீ மற்றும் வெப்பம் தொடர்பான இறப்புகளை ஏற்படுத்துகிறது.

ஐக்கிய இராச்சியத்தின் வானிலை ஆய்வு அலுவலகம் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் இங்கிலாந்தின் பெரும்பகுதியில்,  40C ஐத் தாண்டும் என எதிர்வுகூறியுள்ளது. இங்கிலாந்தில் தற்போதைய அதிகபட்ச வெப்பநிலை 38.7C (101.6F) குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஐக்கிய இராச்சியத்தின் ஹெல்த் செக்யூரிட்டி ஏஜென்சியும் அதன் வெப்பம் தொடர்பான சுகாதார எச்சரிக்கையை அடுக்கு மூன்றில் இருந்து அடுக்கு நான்காக உயர்த்தியது.

காலை 11 மணி (10:00 GMT) மற்றும் மாலை 3 மணி (14:00 GMT) வரை சூரிய ஒளியில் இருந்து விலகி இருக்கவும், நிறைய திரவங்களை குடிக்கவும் மற்றும் உடல் உழைப்பைத் தவிர்க்கவும் குடியிருப்பாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

No comments