அனைவரையும் ஒன்றிணைந்து செயற்பட வருமாறு ரணில் அழைப்பு


புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது போட்டியாளர்களான டலஸ் அழகப்பெரும மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு நன்றி தெரிவித்ததுடன், புதிய முறையில் ஒன்றிணைந்து செயற்படுமாறு பாராளுமன்ற உறுப்பினர்களை வலியுறுத்தினார்.

மக்கள் பழைய அரசியலை எங்களிடம் கேட்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன் என வாக்குப்பதிவைத் தொடர்ந்து ஆற்றிய உரையில் விக்கிரமசிங்க கூறினார்.

கடந்த 48 மணிநேரமாக நாங்கள் பிரிக்கப்பட்டோம். அந்தக் காலம் இப்போது முடிந்துவிட்டது. நாம் இப்போது ஒன்றாக வேலை செய்ய வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

புதிய ஜனாதிபதி சபாநாயகரிடம் நாடாளுமன்ற வளாகத்திலேயே ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments