சேவைக்கு திரும்புகின்ற பேருந்துகள்!

 


வடமாகாணத்தில் ஏட்டிக்குப்போட்டியாக அரச மற்றும் தனியார் பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில் குதித்தத்தால் வடமாகாணம் முற்றாக இன்று திங்கட்கிழமை முடங்கிபோனது.

பேருந்து சேவைகள் இன்மையால் மாணவர்கள்,அலுவலக பணியாளர்கள் மற்றும் வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளாளர்கள் என  பலரும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று மாலை யாழ்.மாவட்ட செயலருடான சந்திப்பினையடுத்து இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் போராட்டத்தினை கைவிட்டு சேவையை ஆரம்பித்துள்ளன.

எனினும் தனியார் போக்குவரத்து சேவையினரது பணிப்புறக்கணிப்பு போராட்டமும் கைவிடப்பட்டுள்ளதாகவும் நாளை முதல் 50 விழுக்காடு பேருந்துகள் சேவையிலீடுபடுமென  அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments