நடாளுனமற்றில் கோட்டாவுக்கு எதிராகப் போராட்டம்! எதிர்ப்பை அடுத்து வெளியேறினார் கோட்டா!


நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

'கோ ஹோம் கோட்டா' என எதிர்தரப்பினர் பதாதைகளை ஏந்தி கூச்சலிட்டு எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதேநேரம் ஆளும் தரப்பினர் எதிர்த்தரப்பினரின் போராட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து 'வி வோன்ட் கோட்டா' எனக் கூச்சலிட்டனர்.

இரு தரப்புப் போராட்டத்தை அடுத்து  நாடாளுமன்றம் 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்திலிருந்து அதிபர் கோட்டாபய அங்கிருந்து வெளியேறினார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமை, எதிர்கால திட்டமிடல் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் விசேட உரையாற்றினார்.

வீழச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை ஆறு மாத காலத்திற்குள் முன்னேற்றமடைய செய்யும் திட்டம் தம்மிடம் உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளதை சிறந்தது. பொருளாதார மீட்சிக்கான திட்டங்கள் அவரிடம் இருக்குமாயின் அவர் அதனை ஜனாதிபதியிடம் முன்வைக்கலாம் அல்லது பாராளுமன்றில் முன்வைக்கலாம்.

பொருளாதார மீட்சிக்கான சிறந்த திட்டத்தை அனுர குமார முன்வைப்பாராயின் பிரதமர் பதவியை அவருக்கு விட்டுக்கொடுக்க தயார் ,அத்துடன் அமைச்சரவையும் பதவி விலகும்,அவரின் திட்டம் வெற்றிப்பெற்றால்  அவருக்கு பொருளாதார நோபல் பரிசு வழங்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியினர் 'கோ ஹோம் கோட்டா' என கூச்சலிட்டு , கோ ஹோம் கோட்டா என பதாததைகளை ஏந்தி ஜனாதிபதி கோட்டபாயவை நோக்கி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்கள். சிறந்த முறையில் நாட்டை நிர்வகிக்க முடியாவிடின் பதவி விலகுமாறும் வலியுறுத்தினார்கள்.

இதன்போது சபையில் அமைதியற்ற தன்மை நிலவியது. ஆளும் தரப்பினரும் ஆசனங்களில் இருந்து எழுந்து நின்று எதிர்தரப்பினரின் எதிர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதன்போது முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அருகில் வந்த அவருடன் கதைத்து விட்டு சென்றதன் பின்னர்   ஆளும் தரப்பின் முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி திஸாநாயக்க,மஹிந்தானந்த அளுத்கமகே உட்பட ஒருசில  உறுப்பினர்கள் மட்டும் 'வி வோன்ட் கோட்டா'' என குறிப்பிட்டு எதிர்தரப்பினருக்கு எதிராக கூச்சலிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments