எரிபொருள் வரட்டும்?:பட்டினி இருங்கள்!

 


கடல் தொழிலுக்கு தேவையான எரிபொருளை வழங்கி இன்றுடன் 47 நாட்கள் ஆகின்றன.ஆரம்பத்தில் 20 லீற்றர் எரிபொருள் தந்தார்கள்.இன்றுடன் 47 நாட்கள் ஆகின்றது.எமது குடும்பங்கள் பற்றி ஒருவருக்கும் அக்கறை இல்லை. பெற்றோல்,டீசல் கூட கிடைக்கிறது ஆனால் மீன்பிடி இயந்திரங்களிற்கு தேவையான மண்ணெண்ணெய் பற்றிய கதையே இல்லை.84 ரூபாவிற்கு விற்பனையான மண்ணெய் கறுப்புச் சந்தையில் 1300 ரூபா வரையில்; விற்பனை செய்யப்படுகிறது.

கடல் தொழில் அமைச்சரோ 20 ஆம் திகதிக்கு பின்னர் இந்தியாவிலிருந்து காங்கேசன்துறைக்கு எரிபொருளை கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.அதுவரை மீனவர்களது குடும்பங்கள்  பட்டினிச் சாவை எதிர்நோக்கி காத்திருப்பதாவென கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசத்தின் தலைவர் நா.வர்ணகுலசிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.


No comments