ரணிலுக்கே ஆதரவு! விக்கி


தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தனது ஆதரவை பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்குவதாக அக்கட்சியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தெரிவிற்காக பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவை வழங்கியுள்ள நிலையில், தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தனது ஆதரவை பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்குவதாக அறிவித்தது. 

இதேவேளை, தமிழ் மக்கள் சார்பில் 6 கோரிக்கைகள் அடங்கிய கடிதமொன்றை கடந்த 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பதில் ஜனாதிபதியும் புதிய ஜனாதிபதி வேட்பாளருமான ரணில் விக்கிரமசிங்கவிடம்  விக்கினேஸ்வரன் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே வாக்கெடுப்பில் எவருக்கும் வாக்களிக்கப்போவதில்லை என விக்னேஸ்வரன் அறிவித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.

அதேநேரம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளது.

No comments