மோசடியில் யாழில் அதிகாரிகள்:துவாரகேஸ்வரன்! யாழ்மாவட்டத்தில்  எரிபொருள் விநியோகத்தில் இடம்பெறும் முறைகேடான நடவடிக்கைகைளை யாழ்.மாவட்ட செயலர் சீர் செய்யவேண்டும்; என தொழிலதிபர் தி. துவாரகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றைய தினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட அவர் யாழ்.மாவட்டத்தின் தேவையை விட அதிகளவான எரிபொருள் வருகிறது. அவ்வாறு அதிகமாக வருகிற படியால் தான் கறுப்புச்சந்தையில் 1500 ரூபாவிற்கும் அதிகமாக எரிபொருள் விற்கப்படுகிறது . இத்தகைய மோசடிகளின் பின்னணியில்  மேலதிக மாவட்ட செயலர் பிரதீபன் என்பவர் இருந்துவருவதுடன் முறைகேடான சட்டதிட்டங்களை உருவாக்கி செயற்பட்டுவருவதாகவும் துவாரகேஸ்வரன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

யாழ்குடா நாட்டு மக்கள் கண்ணியமானவர்கள்,பொருட்தட்டுப்பாடு தொடர்பில் போராட்டத்தில் அவர்கள் இறங்கவில்லை. 

இந்நிலையில் தற்போதைய அரசாங்கத்தை பிழையான வழியில் சித்திரிப்பதற்காக மக்களை தூண்டுகிற செயற்பாட்டிலமேலதிக மாவட்ட செயலர்;,நல்லூர் பிரதேச செயலர் மற்றும் காரைநகர் பிரதேச செயலரும் ஈடுபடுகின்றனர் எனவும் துவாரகேஸ்வரன் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.


No comments