ஜனாதிபதி கதிரை:நம்பிக்கையிழந்த சஜித்!



இலங்கையில்   வழமையாக நாட்டு மக்கள் வாக்களித்து ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்படுவார்.

ஆனால் இந்த மாதம் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் வாக்களிப்பின் ஊடாக புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படவுள்ளார்.

தற்போது இருக்கின்ற 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் கோத்தாபய ராஜபக்ஷவின் கட்சியை சேர்ந்தவர்களாக இருப்பதால் இது மக்களுடைய கருத்தாக பார்க்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் மேலும் கூறும்போது புதிதாக ஒரு தேர்தல் நடத்தப்படுவதன் மூலமே நாட்டில் முறைமை மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments