எரிபொருள் பிரச்சனை:சுகாதாரதுறை முடங்குகின்றது?இலங்கையில்  ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினையானது சுகாதார சேவையை ஸ்தம்பிதம் அடைய செய்துள்ளது .

சுகாதார சேவை எதிர்கொண்டுள்ள எரிபொருள் பிரச்சினைக்கு இதுவரை தீர்வு பெற்றுக்கொடுக்கப்டபவில்லை ,

சுகாதார சேவையை சேர்ந்த தரப்பினர் தொடர்ச்சியாக எரிபொருள் வரிசையில் நிற்க வேண்டிய நிலைமைக்கே தள்ளப்பட்டுள்ளனர்.

கிவ்ஆர் கோட் முறை செயற்படுத்தப்படுதவதாகக் கூறப்பட்டாலும் அது நடைமுறையில் சாத்தியமாகியுள்ளதா என்பது கேள்விக்குறியே.

சுகாதார சேவையினர் எதிர்கொண்டுள்ள எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதுவே உண்மை நிலவரம். டெங்கு பரவல் உள்ளிட்ட நோய் நிலைமைகளுக்கு உள்ளாகும் நோயாளர்களை வைத்தியசாலைகளுக்கு கொண்டுவருவதற்குக்கூட முடியாத நிலைமையே நாட்டில் காணப்படுகின்றது.

நோயாளர்களை வைத்தியசாலைக்கு அழைத்து வருவதற்கான வசதிகள்கூட நாட்டில் தற்போது இல்லை என்பதே உண்மையான நிலவரம்.

அதேபோன்று சுகாதார சேவையினருக்கு வைத்தியசாலைக்கு வருவதற்கான சூழல் இல்லை.

எனவே நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை சிறிய விடயமாகக் கருதிவிட முடியாது.

இந்தப் பிரச்சினைகளால் நெருக்கடிக்கு உள்ளானவர்களே போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

பாராளுமன்றத்தில் உள்ள அனைவரும் தங்களுக்கான பங்குகளை பிரித்துக்கொண்டது போதும். தற்போதேனும் நாடு தொடர்பிலும் மக்கள் தொடர்பிலும் சிந்தித்து செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.

No comments