விமானம் பறக்கவில்லை:இந்தியாவில் தப்பு!இன்று ஜீலை முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படுமென அறிவிக்கப்பட்ட பலாலிக்கும் இந்தியாவிற்கும் இடையிலான விமான சேவைகள் ஆரம்பிக்காததற்கு இந்தியாவே காரணம் என அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றச்சாட்டியுள்ளார்.

இந்தியாவில் எரிபொருள் பிரச்சினை ஏற்பட்டிருக்கின்றது. விமானங்கள் இங்கு வந்துவிட்டு திரும்பி செல்வதற்கு எரிபொருள் இல்லை. அத்துடன் இந்தியாவில் இருக்கக்கூடிய சில சட்டச் சிக்கல்கள் காரணமாகவும் விமான சேவையில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசினை பொறுத்தவரை யாழ்ப்பாணத்திலிருந்தான விமான சேவைக்கு தனது பூரணமான ஒத்துழைப்பினையும் அங்கீகாரத்தினையும் வழங்குகிறதெனவும் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.


No comments