இலங்கைக்கான அமெரிக - சீனத் தூதுவர்கள் திடீர் சந்திப்பு


இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஸென்ஹொங் மற்றும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் உள்ள சீன தூதரகத்தில் இன்று (13) இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தூதரகத்தின் உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, பரஸ்பர ஆர்வமுள்ள, பரந்த விடயப்பரப்பு தொடர்பில் நட்பு ரீதியிலான கலந்துரையாடல் இடம்பெற்றதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

தற்போதைய நெருக்கடிகளை சமாளிக்க இலங்கைக்கு உதவுவதற்கு சீனாவும் அமெரிக்காவும் இணைந்து செயற்பட முடியும் என இலங்கைக்கான சீனத் தூதரகம் குறித்த ட்விட்டர் பதிவில் மேலும் தெரிவித்துள்ளது.

No comments