கோட்டாபயவின் பிறந்த நாளில் அவருக்கு எதிராக மக்கள் போராட்டம்!

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக மக்கள் இன்று திங்கட்கிழமை போராட்டம் ஒன்றை நடத்தினர்.

கோட்டாபயவின் பிறந்தநாளை முன்னிட்டு கோட்டா கோ கமவில் ஆர்ப்பாட்டம் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதி செயலகத்தின் மற்றைய நுழைவாயிலையும் நிதி அமைச்சின் நுழைவாயிலையும் இடைமறித்து கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

ஜனாதிபதி செயலகம் மற்றும் நிதி அமைச்சின் லோட்டஸ் வீதியிலுள்ள நுழைவாயில்களை மறித்தமை தொடர்பில் 4 பெண்கள் உள்ளிட்ட 21 பேர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர்.


No comments