இலங்கை பாராளுமன்றமும் மூடப்படுகின்றது!


இலங்கையில் எரிபொருள் நெருக்கடி காரணமாக பாராளுமன்றம் இன்றும் நாளையும் மாத்திரம் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று கூடிய பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவைத் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே எதிர்கட்சிகள் அனைத்தும் வெளியேறியுள்ள நிலையில் தற்போது இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

No comments