வெற்றி பெற்றார் பொறிஸ் ஜோன்சன் : பிரதமராகத் தொடர்வார்


பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு எதிரான அவரது கட்சியான கொன்சேவெட்டிக் கட்சியினர் கொண்டுவந்து நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் பொறிஸ் ஜோன்சன் வெற்றி பெற்றார்.

இன்று வெஸ்மினிஸ்டரில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அவருக்கு ஆதரவாக 211 பேரும் எதிராக 148 பேரும் வாக்களித்தனர் என்று நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்திய சேர் கிரஹாம் பிராடி முடிவை அறிவித்தார்.

இதன்மூலம் பொறிஸ் ஜோன்சன் பிரித்தானியப் பிரதமராகவும் கட்சியின் தலைவராகவும் தொடர்வார். மாறாக அவர் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்கடிக்கபட்டிருந்தால் அவர் பிரதமர் பதவியையும் கட்சியின் தலைவர் பதவியையும் இழந்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் பொறிஸ் ஜோன்சன் மீது அடுத்த ஒரு வருடத்திற்கு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு கொண்டுவரமுடியாது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் முடிவானது ஒரு அரசாங்கமாக நாம் நகர்ந்து செல்வது மக்களுக்கு மிகவும் முக்கியமானது. இனி நான் நினைக்கும் விஷயங்களில் கவனம் செலுத்தலாம் என்றார்.

சகாக்களுக்கும் அவர்கள் எனக்கு அளித்த ஆதரவிற்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அத்தடன் இப்போது செய்ய வேண்டியது அரசாங்கம் மற்றும் ஒரு கட்சியாக ஒன்றிணைவதுதான் என்றார்.

கொன்சர்வேடிவ் கட்சிக்குள் நடந்து வரும் வாதங்களை எங்களுக்குப் பின்னால் நிறுத்த இது ஒரு தருணம் மற்றும் வாய்ப்பு என்று அவர் மேலும் கூறுகிறார்.


No comments