ரணிலும் ராஜபக்சவும் ஒன்றே!ராஜபக்சே குடும்பம் அதிகாரத்தில் இருந்த போது தங்கள் உறவினர்களையும் ,  இராணுவ அதிகாரிகளையும்  அரச நிருவாகத்தின் பலவேறு துறைகளின் தலைவர்களாக நியமித்து இருந்தார்கள் 

தற்போது ராஜபக்சே குடும்பத்தின் துணையுடன் அதிகாரத்திற்கு வந்து இருக்கும் ரணில்   தேர்தலில் தோல்வியடைந்த தனது கட்சி உறுப்பினர்களை அரச நிருவாகத்தின் பலவேறு துறைகளுக்கு நியமித்து இருக்கின்றார் 

குறிப்பாக கடந்த பாராளமன்ற தேர்தலில் தோல்வியடைந்த  சாகல ரத்நாயக்க  தற்போது பிரதமர் அலுவலக பிரதானியாக நியமிக்கப்பட்டு இருக்கின்றார் 

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் சட்ட ஒழுங்கு அமைச்சராக இருந்த  சாகல ரத்தநாயக்க அவர்கள் 4 பில்லியன் ரூபா அரசாங்க நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கி தலைமறைவாக இருந்த தற்போதைய ஜனாதிபதி செயலாளர்  காமினி செனரத் அவர்களை தனது வீட்டில் வைத்து பாதுகாத்து மேற்குறித்த வழக்கில் இருந்த தப்ப உதவி செய்து இருந்தார் 

அதே போல கடந்த தேர்தலில் தோல்வியடைந்த  ரணில்  மருமகன்  ருவான் விஜேவர்தன  தற்போது பிரதமர் அலுவலக இணைப்பாளராக நியமிக்கப்பட்டு இருக்கின்றார் 

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த  ருவான் விஜேவர்தன ராஜபக்சே குடும்பம் மைத்திரிபால சிறிசேன அவர்களின் உதவியுடன் சதி செய்து ஆட்சியை கைப்பற்ற முற்பட்ட போது தங்களுக்கு உதவ முன்வந்த கட்சி தலைவர்களுக்கு 500 மில்லியன் ரூபா பணத்தையும் பாராளமன்ற உறுப்பினர்கள் ஓவருவருக்கும் 300 மில்லியன் ரூபாவும் ராஜபக்சே குடும்பம் இலஞ்சம் வழங்கியதாக  பகிரங்கமாக அறிவித்து இருந்தார் 

இது தவிர,  ருவான் விஜேவர்தன பாதுகாப்பு அமைச்சராக இருந்த போது பாதுகாப்பது அமைச்சின் துணைப்படை  கொடுப்பனவு பட்டியலில் இருந்த சகரான் தலைமையிலான கும்பல் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கான  பொதுமக்கள் கொல்லப்பட்டு இருந்தனர் 

அதே போல நல்லாட்சி அரசாங்கத்தில் கல்வி அமைச்சராக இருந்த  அகில காரியவசம் பிரதமர் அலுவலக  அதிகாரிகளில் ஒருவராக நியமிக்கப்பட்டு இருக்கின்றார் 

அகில காரியவசம்  நல்லாட்சி அரசாங்கத்தில் கல்வி அமைச்சராக இருந்த போது பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட  இலவச சீருடை தொடர்பான கூப்பனில் தனது படத்தை அச்சிட்டு வழங்க வழங்குவதற்காக வழமையாக அச்சிடுவதற்க்கு செலவு செய்யும் தொகையிலும் 25 % அதிகமாக செலவு செய்து இருந்தார் 

ஆகவே ராஜபக்சே குடும்பத்திற்கும் ரணில் விக்ரமசிங்கே கும்பலுக்கும் எந்த வேறுபாடுகளும் கிடையாது.

இவர்கள் யாருக்கும் தூய அரசியல் கலாச்சாரத்தை கட்டி எழுப்ப வேண்டும் என்கிற அக்கறையும் கிடையாது 

சுயநல அரசியலை தான் செய்கின்றார்கள் 

அதே போல இரண்டு தரப்புமே சிங்கள பௌத்த மேலாண்மை கருத்தியலை போட்டி போட்டு பகிர்ந்து கொள்ளுகின்றார்கள் 

குறிப்பாக சிங்கள பௌத்த அரசியல் பீடம் தனது அரசியலை பேரிடர் காலப் பகுதியில் நிறுத்தி வைக்கும் என்பது நம்ப முடியாதது என்பதற்கு குருந்தூர் மலை விவகாரம் ஒரு சான்று 

ஆனால் இந்த உண்மைகளை  மறந்து எங்களில் சிலர் இப்போது ரணில் புராணம் பாடுகிறார்கள். 

பொருளாதாரத்தை  ரணில் விக்ரமசிங்கே அவர்களை தவிர வேறு யாரால் நிமிர்த்த முடியும் என கேள்வி கேட்கின்றார்கள் 

கடந்த கொரோனா பெருந் தொற்று காலத்தில் கோத்தபாயா ராஜபக்சே அவர்களை தவிர வேறு யாரால் பெருந்தொற்றை  கட்டுப்படுத்த முடியும் என் கேட்ட அதே கும்பல் இப்போது ரணில் புகழ் படுகின்றது .

No comments