மருந்திற்கு தடை:கஞ்சாவிற்கு இல்லையாம்? கிளிநொச்சி விவேகானந்தநகரில் உள்ள வீடு ஒன்றில் நேற்று (03) மாலை 6 மணியளவில் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்து தேடுதல் மேற்கொண்ட போது 208 Kg கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கஞ்சாஞாவை கடத்த பயன்பட்ட சொகுசு வாகனம், மற்றும்  மன்னாரைச் சேர்ந்த சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.இதனிடையே வேலணை மண்கும்பான் பகுதியில் சுமார் 120 கிலோ கஞ்சா விசேட அதிரடிப்படையினரால்  மீட்கப்பட்டுள்ளது.

மண்கும்பானில் உள்ள ஓர் வீட்டில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே அதிரடிப்படையினர் சுற்றிவளைத்து பிடித்துள்ளனர்.

இதன்போது 4 மூடைகளில் சுமார் 120 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதோடு அதனை உடமையில் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்

No comments