மகிந்த வந்தார்?வரவில்லை?தென்னிலங்கை அரசியலை தீர்மானிப்பவர்களாக மகிந்த மற்றும் பஸிலே உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.குறிப்பாக அமைச்சரவை கூட்டத்தில் மகிந்த கலந்து கொண்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இதனிடையே  முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ பதவியில் இருந்து விலகியதன் பின்னர் எந்தவொரு அமைச்சரவை கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இறுதியாக இடம்பெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பதிவில் இதனை குறிப்பிட்டுள்ளார்.


No comments