டீசலென தண்ணீர் விற்பனைஎரிபொருள் வரிசையில் காத்திருந்த இருவரை ஏமாற்றி,  டீசல்  என தெரிவித்து, 60 லீற்றர் தண்ணீரை 3 கேன்களில் விற்ற சம்பவம் ஒன்று பண்டாரகம பகுதியில் பதிவாகியுள்ளது.

குறித்த 60 லீற்றர் நீர், 24,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

பண்டாரகமயிலிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு அருகில் குறித்த இருவரும் 5 நாள்களாக காத்திருந்த போது அருகில் இருந்த மற்றொரு நபருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

பிறிதொரு இடத்தில் திருட்டு தனமாக எரிபொருள் விற்பனை செய்யப்படுவதாகவும் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் புதிதாக அறிமுகமான நபர் குறித்த இருவரிடமும் தெரிவித்துள்ளார்.


இதனையடுத்து அந்த நபர் தெரிவித்த விடயங்களை நம்பிய இருவரும் 24,000 ரூபாய்க்கு 3 கேன்களில் டீசல் என நினைத்து தண்ணீரை கொள்வனவு செய்து, தமது வாகனங்களுக்கு ஊற்றிய போது, அது தண்ணீர் என தெரியவந்துள்ளது

No comments