கோதுமை போரின் ஆயுதமாக இருக்க முடியாது என்கிறார் போப்


உக்ரைன் துறைமுகங்களில் இருந்து கோதுமை ஏற்றுமதி மீதான தடையை நீக்குமாறு ரஷ்யாவிடம் வேண்டுகோள் விடுத்தார் பாப்பாண்டவர் போப் பிரான்சிஸ்.

அத்துடன் உணவுப் பொருட்களை போரின் ஆயுதமாக பயன்படுத்த முடியாது என்று கூறியுள்ளார்.

செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்களிடம் பேசிய அவர், பல மில்லியன் மக்கள் உக்ரைனில் இருந்து குறிப்பாக உலகின் ஏழ்மையான நாடுகளில் கோதுமையை நம்பியிருப்பதால் தடை நீக்கப்பட வேண்டும் என்றார்.

No comments