இலங்கை:அரச ஊழியர்கள் வேலை இழப்பு?இன்றைய (06) 24 மணிநேர ஹர்த்தலால் இலங்கை மீண்டும் முடங்கியுள்ளது.

அரசு, அரை அரசு நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் ஆடைத் துறையைச் சேர்ந்தவர்களும் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.

இதேவேளை அரசாங்க மருத்துவமனைகள் வழக்கம் போல் இயங்கி வருவதாகவும், அனைத்து அவசர சிகிச்சைகள் இயங்கிவருகின்றன.

நேற்று நள்ளிரவு 12 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே இன்றைய தினம் கடமைக்கு திரும்பாத அரச பணியாளர்களது மே மாத சம்பளம் இடைநிறுத்தப்படுவதாக வெளியான போலி அறிவிப்பினையடுத்து பரபரப்பு அரச திணைக்களங்களில் தொற்றியிருந்தது.

எனினும் பின்னராக அது போலியானதென அரச உள்நாட்டு நிர்வாக அமைச்சே அறிவித்துள்ளது. 

கர்த்தாலில் ஈடுபடும் உத்தியோகத்தர்களின் சம்பளம் வெட்டப்படும் என்று வெளியான செய்தியை ஜனாதிபதி செயலகம் இன்று மறுத்துள்ளது.No comments