முள்ளிவாய்க்கால் நடை பேரணி யாழ்.பல்கலைக்கழகத்தை வந்ததடைந்தது!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு இன்று காலை வல்வெட்டித்துறையில் ஆரம்பிக்கப்பட்ட நடைப் பேரணி யாழ்ப்பாணப்

பல்லைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியடியைச் சேர்ந்தடைந்தது.

அங்கு மலர் தூபி வணக்கம், அமைதி வணக்கம் இடம்பெற்றிருந்தது. நினைவேந்தலில் பல்கலைக்கழக மாணவர்கள், மதத்தலைவர்கள், காணால் போனோரின் உறவுகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

பேரணியில் கலந்துகொண்டு வருகை தந்தவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி எனப்படும் உப்புக் கஞ்சியும் பரிமாறப்பட்டது.

முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நாளான மே 18 நாளை முன்னிட்டு இன விடுதலையினை தேடி முள்ளிவாய்க்காலினை நோக்கி என்ற கருப்பொருளில் கிழக்கு மாகாணம் பொத்துவிலிலிருந்து மாபெரும் மக்கள் எழுச்சி பேரணி நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.

அதேபோன்று இன்று யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் ஆலயத்திலிருந்து முள்ளிவாய்க்கால் நோக்கிய நடைப் பேரணி ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments