கூட்டமைப்பிற்கு கோ ஹோம்!2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் சூழ்ச்சியின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் சட்டத்தரணிகள் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாத்தார்கள். தற்போது மீண்டும் அவ்வாறான நிலைக்கு செல்வார்கள் என்று கருதவில்லையென கூட்டமைப்பின் பங்காளி கட்சியான தமிழீழ விடுதலை இயக்க நாடாளுமன்ற உறுப்பினரான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். 

தமிழ் தலைமைகள் பல தடவைகள் சூடுகண்டும் மீண்டும் மீண்டும் அடுப்பங்கரைக்கு சென்றுள்ளனர். மீண்டும் அவர்கள் செல்வார்களானால் இன்று கோட்டா கோ கோம் போராட்டத்தினை முன்னெடுப்பதுபோன்று எங்களுக்கு எதிராக தமிழ் மக்கள் கோ கோம் என்னும் கூச்சலிடுவதற்கு சந்தர்ப்பத்தை வழங்கியதாக அமையும் எனவும் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

No comments