இரும்பு அல்ல,செத்தலும் வாங்கினோம்?



இந்திய கடனில் இலங்கை இந்தியாவிலிருந்து இரும்பினை கொள்வனவு செய்ததான குற்றச்சாட்டுக்களையடுத்து அதற்கான விளக்கத்தை அரசு வழங்கியுள்ளது.

இலங்கையின் உணவு, சுகாதாரம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக, இந்திய அரசு 1 பில்லியன் அமெரிக்க டொலரை  ஸ்டேட் பேங்க் ஒஃப் இந்தியா மூலம் மார்ச் 17, 2022 அன்று இலங்கை அரசுக்கு சலுகைக் கடனாக வழங்கியது. 

அரிசி, செத்தல் மிளகாய் போன்ற உணவுப் பொருட்கள் ஏற்கனவே அதன் கீழ் வழங்கப்பட்டுள்ளன. 

இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் முன்னுரிமைகளின் அடிப்படையில் சீனி, பால் மா, கோதுமை, மருந்துகள், எரிபொருள் மற்றும் தொழில்துறை மூலப்பொருட்களை வழங்குவதற்கான வேறு பல ஒப்பந்தங்கள் இந்தக் கடன் வசதியின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன.

No comments