மீண்டும் கதிரை:டக்ளஸ் வென்றார்!

இலங்கையின் புதிய அமைச்சரவையில் இன்றும் மேலும் சில புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் இன்று காலை இந்த பதவிப் பிரமாணம் நிகழ்வு இடம்பெற்றது.

இதற்கமைய இலங்கை கடற்றொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தவும் வீதி மற்றும் நெடுஞ்சாலைகள்,ஊடகத்துறை அமைச்சராக பந்துல குணவர்தனவும் நீர் வழங்கல் அமைச்சராக கெஹெலிய ரம்புக்வெலவும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

அத்துடன், விவசாயம் மற்றும் வனவிலங்குகள், வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சராக மஹிந்த அமரவீரவும்,கைத்தொழில் அமைச்சராக ரமேஸ் பத்திரணவும் விதுர விக்ரமநாயக்க புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சராகவும் அஹமட் நஸீர் சுற்றாடல் அமைச்சராகவும்  அனுருத்த ரணசிங்க நீர்பாசனம், இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை அமைச்சராகவும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்

No comments