கோத்தாவும் வெளியேறுகிறார்??


இலங்கை ஜனாதிபதி கோத்தபாய தனது பதவியிலிருந்து வெளியேற ஏதுவாக முதற்கட்டமாக பாதுகாப்பமைச்சர் பதவியிலிருந்து வெளியேறவுள்ளார . 

15 வருடங்களிற்கு மேல் பாதுகாப்பு விவகாரங்களை கையாண்ட பின்னர் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சினை தன்னிடமிருந்து வேறு ஒருவருக்கு கையளிக்க விரும்புகின்றார்.

வியாழக்கிழமை புதிய அமைச்சரவை குறித்து பிரதமருடன் ஆராய்ந்தவேளை ஜனாதிபதி இதனை பிரதமருக்கு தெரிவித்தார்.

21வது திருத்தமாக 19 வது திருத்தம் நிறைவேற்றப்பட்டால்  மைத்திரிபால சிறிசேனவிற்கு பின்னர் ஜனாதிபதியொருவர்  எந்த அமைச்சரவை பதவியையும் வகிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சர் பதவியை ரமேஸ் பத்திரனவிற்கு வழங்க முன்வந்தார்,ஆனால் அவர் அதனை ஏற்கவில்லை ,அதன் பின்னரே அவர் அமைச்சராக பதவியேற்றார்.

அவரது மனதை மாற்றுவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.அதனை அவர் ஏற்கவிரும்பாவிட்டால் இன்னொரு தெரிவை மேற்கொள்ளவேண்டும் என அவை தெரிவித்தன

No comments