பின்னடித்த முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்!ஊடக விவாதத்தில் தப்பித்தோடிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினரை சவாலுக்கு அழைத்துள்ளார் யாழ்.மநாகரசபை உறுப்பினர் பார்த்தீபன்.

 ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நேற்று (20) இரவு 7 மணிக்கு விவாத நிகழ்ச்சி ஒன்றுக்கு அழைத்திருந்தது. என்னுடன் ஒரு கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் பங்கு கொள்வதாக இருந்தது. முதலில் அவ் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நிகழ்ச்சிக்கு சென்று விட்டார். நானும் அவ்விவாத நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்த போது பாராளுமன்ற உறுப்பினர் வந்து விட்டார் வாருங்கள் என்று குறித்த தொ லைக்காட்சி நிறுவனத்தில் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதற்கு நான் வந்து கொண்டு இருக்கின்றேன் என்று பதிலளித்தேன். நான் குறித்த தொலைகாட்சி நிறுவனத்தில் எனது உந்துருயினை நிறுத்தும் போது  குறித்த விவாத நிகழ்ச்சி தொகுப்பாளரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. "இன்று வேண்டாம் இன்னொரு நாள் செய்வோம் மன்னிக்கவும்" என்று கூறினார். நான் திரும்பி சென்று விட்டேன். ஆனால் குறித்த கௌர பராளுமன்ற உறுப்பினரின் தனிமையான பிரசன்னத்துடன் குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது

பின்னர் ஒரு சம்பவத்தை அறிந்தேன்: குறித்த கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தொலைக்காட்சி நிர்வாகத்திடம் "நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் மற்றவர் யார்? " என்று கேட்டிருக்கின்றார். அதற்கு பார்த்திபன் என்ற பதில் விடையாக சொல்லப்பட்டதாம். அப்போது அவர் கூறினாராம் "அப்படி என்றால் நான் இதில் கலந்து கொள்ளவில்லை நான் போகின்றேன்" என்று. அதனால் தான் நிகழ்ச்சி தொகுப்பாளர் என்னை வர வேண்டாம் என்று கூறினாராம். இது நடைபெற்ற சம்பவம்.

நான் ஒரு சாதாரண மாநகர சபை உறுப்பினர். நான் தான் ஒரு கௌரவ பாராளுமன்ற உறுப்பினருடன் விவாதம் ஒன்றுக்கு செல்வதற்கு தயங்க வேண்டும். ஆனால் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தன்னுடைய துணிச்சலைக் காட்டுகின்ற இராணுவம் மற்றும் பொலிசாரின் மிரட்டல்களுக்கு பணியாத ஒரு பாராளுமன்ற உறுப்பினர் "அவர் வந்தால் நான் வரமாட்டேன்" என்று பாலர் பாடசாலை பிள்ளைபோல் அடம்பிடிப்பதன் மாயம் நான் அறியேன்.

குறித்த கௌரவ பாராளுமன்ற உறுப்பினரிடம் நேர்மையிருந்தால் அறம் சார்ந்த செயற்பாடுகள் இருந்தால் உண்மையான தமிழத்தேசிய உணர்விருந்தால் என்னை முகப்பு புத்தகங்களில் விமர்சனம் செய்வதையும் கேள்விகள் எழுப்புவதையும் விடுத்து நேற்று நான் வந்தால் வரமாட்டேன் என்று  சொன்னது போல் இல்லாமல் ஒரு விவாத நிகழ்ச்சிக்கு வருமாறு அன்புடனும் பண்புடனும் அழைக்கின்றேன். நீங்கள் அடிக்கடி கூறுவீர்கள் போலித் தேசியவாதிகளை தோலுரித்து காட்டவேண்டும் என்று அது போல் நான் தமிழை நெசிக்காதவன் என்ற தங்களுடைய அரசியல் காழ்புணர்ச்சியுடனான கருத்தை ஒரு நிகழ்ச்சியில் என்னுடன் கலந்து கொண்டு மக்களுக்கு தெரியப்படுத்துக்கள்.

இல்லை நான் பொது வெளியில் வரமாட்டேன் என்று ஓடி ஒளித்துக் கொண்டு இப்போது நீங்கள் செயற்படுவது போல் மறைந்திருந்து  முகப்பு புத்தங்கள் வாயில் தான் கருத்துக்களை தெரிவிப்பேன்று என்று நீங்கள் தொடந்தும் செயற்பட நினைத்தால் நீங்கள் எதற்கோ அஞ்சுகின்றீர்கள் ஏதோ ஒரு நிகழ்ச்சி நிரலில் செயற்பாடுகின்றீர்கள் எதோ பல பிழைகள் விட்டிருக்கின்றீர்கள் என்ற எண்ணத்தோற்றப்பட்டை உறுதி செய்லவதாக அமைகின்றது. இதை தான் பழமொழியாக அனைவரும் சொல்லுவார்கள் குற்றமுள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும் என்று.

நான் எங்கும் ஓடி ஒளிக்க மாட்டேன் அவர் அவந்தா நான் வரமாட்டேன் இவர் வந்த வரமாட்டேன் என்று முன்பள்ளி சிறுவன் போல் அடம்பிடிக்க மாட்டேன். முகப்பு புத்தகங்களில் விமாசிப்பதை விடுத்து ஒரு நிகழ்ச்சியில் பங்கெடுத்து உங்கள் பேச்சாற்றலால் என்னை தோலுரித்து காட்ட தங்களை அன்புடனும் பண்புடனும் அழைக்கின்றேன், நன்றி என தெரிவித்துள்ளார் வரதராஜன் பார்த்திபன்

No comments