கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பில் மேதினங்கள்!தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் சமத்துவக்கட்சியின் மேதினங்கள் இன்று கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது.

ககுவனத்தை ஈர்க்கும் வகையில் கிளிநொச்சியில் குடுமிப்பிடிகளை கைவிட்டு கூட்டமைப்பின் தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தலைமையில் மேதின ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்தியிருந்தனர்.
இதனிடையே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரது சமத்துவக்கட்சியின் மேதினமும் கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது.

இதனிடையே தமிழ் தேசிய மக்கள் முன்னணியினதும் கூட்டமைப்பின் மட்டக்களப்பு அணியினதும் மேதினங்கள் மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது. 

No comments