இராணுவ நீதிபதிகளே இலங்கையில்!

 


பத்திரிகையாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட கேர்ணல் சமி குணரட்ண உட்பட 12 இராணுவத்தினரும் விடுதலை செய்யப்பட்டனர் மீண்டும் பதவிகள் வழங்கப்பட்டன  என ஹேக்கின் மக்கள் தீர்ப்பாயத்தில் சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நீதித்துறையுடன் எனக்கு கசப்பான அனுபவங்கள் உள்ளன. பிரகீத் விவகாரத்தை கையாண்ட நீதிபதிகளில் ஒருவர் இராணுவ அதிகாரி . அவர் தொடர்ந்தும் இராணுவத்தில் பணிபுரிகின்றாரா என நான் இராணுவத்தினரிடம் கேட்டேன்.நான் இன்னமும் பதிலுக்காக காத்திருக்கின்றேன் எனவும் ஹேக்கின் மக்கள் தீர்ப்பாயத்தில் சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார்.

No comments