வவுனியாவில் மூவர் விடுதலை!வெசாக் தினத்தை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து மூன்று கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

இன்று வெசாக் தினத்தையொட்டி நாடளாவிய ரீதியாக 244 சிறைகைதிகள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து சிறுகுற்றங்களை புரிந்த மூன்று பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

எனினும் அவர்களில் இருவர் வேறு குற்றச்சாட்டுக்களிலும் தண்டனை அனுபவித்து வந்தநிலையில், மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்

சிறைச்சாலைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.


No comments