2000 தொழிற்சங்கங்கள் இணைக்கின்றன.இலங்கையில் நாளை (06) நடைபெறவுள்ள 24 மணிநேர ஹர்த்தாலுக்கு ஆதரவளிக்க 2000க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் தயாராகவுள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் இணை அழைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

அரசு, அரை அரசு நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் ஆடைத் துறையைச் சேர்ந்தவர்களும் இதில் ஈடுபடுவார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை அரசாங்க மருத்துவமனைகள் வழக்கம் போல் இயங்கி வருவதாகவும், அனைத்து அவசர சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (05) நள்ளிரவு 12 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு ரயில் சேவைகள் நிறுத்தப்படும் என புகையிரத தொழிற்சங்க கூட்டணியின் அழைப்பாளர் எஸ்.பி.விதானகே தெரிவித்துள்ளார்.

மேலும் நாளை முதல் 7 நாட்களுக்கு பஸ்கள் இயங்குமா என்பது நிச்சயமற்றதாக உள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

டீசல் பற்றாக்குறையால் பேருந்துகளை இயக்க முடியாத  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாளை (06) நடைபெறவுள்ள 24 மணி நேர ஹர்த்தாலுக்கு தனியார் பஸ் உரிமை யாளர்கள் சங்கமும் ஆதரவளிக்க வுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments