கோத்தாவிற்கு 8-ரணிலுக்கு 7மட்டுமே !


இலங்கையில் ரணில் தலைமையில் அமையவுள்ள 15 அமைச்சர்களை கொண்ட அமைச்சரவையில் எட்டு கதிரைகளை கோத்தபாய எடுத்துக்கொண்டுள்ளார்.

 புதிய அமைச்சரவையில் ஜனாதிபதியின் தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் 8 பேர் உள்வாங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, தினேஷ் குணவர்தன மற்றும் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோரின் பெயர்கள் ஏற்கனவே இந்தப் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments