மகப்பேற்று சத்திர சிகிச்சை கூட கடினமாகியது!

 


மகப்பேற்று சத்திர சிகிச்சையின் பின்னர் தைப்பதற்கு பயன்படுத்தும் நூல் உள்ளிட்ட பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதாக மருத்துவர்கள் மருத்துவ மற்றும் குடிமை உரிமைகள் நிபுணத்துவ சங்கத்தின் பொதுச் செயலாளர் வைத்தியர் ஜயருவான் பண்டார தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போதைய நிலையில் சில வைத்தியசாலைகளில் மகப்பேற்று சத்திர சிகிச்சையின் பின்னர் தைப்பதற்கான நூல்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகின்றது.

நாட்டில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதை மறுப்பதற்கு இல்லை. பிரதேச வைத்தியசாலைகளிலேயே மருந்துகளுக்கு அதிகளவான தட்டுப்பாடு நிலவுகின்றது.

குறிப்பாக சத்திர சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள், உபகரணங்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகின்றது.

No comments