சாவகச்சேரி விபத்தில் இருவர் காயம்!

 


யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் நேற்று திங்கட்கிழமை தனியார் பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை பின்னால் வந்த தனியார் பேருந்து மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments