சிறிசேனாவை இணைக்ககூடாது: விடாப்பிடியாக பேராயர்உயிர்த்தஞாயிறு தாக்குதலிற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முக்கிய காரணம் என்பதால் ஐக்கிய மக்கள் சக்தி சிறிசேனவுடன் இணைந்து செயற்படக்கூடாது என கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.

மைத்திரிபாலசிறிசேனவிற்கு ஆதரவளிக்கும் எவருக்கு எதிராகவும் மக்களை  குறிப்பாக கத்தோலிக்க சமூகத்தை அணிதிரட்டுவோம் என தெரிவித்துள்ள கத்தோலிக்க திருச்சபை குறிப்பாக ஐக்கியமக்கள் சக்தி சிறிசேனவுடன் இணைந்து செயற்படக்கூடாது என தெரிவித்துள்ளது.

கொழும்பு பேராயர் இல்லத்தின் சமூக தொடர்பாடல் இயக்குநர் அருட்தந்தை ஜூ;ட் கிருசாந்த பெர்ணான்டோ இதனை தெரிவித்துள்ளார்.

சிறிசேனவே முதன்மை பொறுப்பு என நீண்டகாலமாக நாங்கள் சுட்டிக்காட்டிவருகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கியமக்கள் சக்தியோ அல்லதுவேறு எந்த குழுவோ சிறிசேனவுடன் இணைந்து செயற்பட்டால் நாங்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு நீதியை எதிர்பார்க்க முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் ஆகவே நாங்கள் இந்த குழுக்களிற்கு எதிராக நிச்சயம் வீதிக்கு இறங்குவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் வரும் எந்த அணிக்கும் எதிராக நாங்கள் நிச்சயமாக மக்களை அணிதிரட்டுவோம் குறிப்பாக கத்தோலிக்க சமூகத்தை அணிதிரட்டுவோம்,அவர்களிற்கு வாக்களிக்க வேண்டாம் என மக்களை கேட்டுக்கொள்ள தயங்கமாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments