மரியுபோல் மசூதியிலிருந்த பணயக்கைதிகள் விடுவிப்பு


மரியுபோல் மசூதியில் இருந்து பணயக்கைதிகளை விடுவித்ததாக ரஷ்யா கூறுகிறது. மரியுபோலில் உள்ள மசூதியில் சிறைபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் பணயக்கைதிகள் பலரை விடுவித்ததாக ரஷ்யா கூறுகிறது.

துருக்கியின் ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனின் வேண்டுகோளின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஜெனரல் இகோர் கொனாஷென்கோவ் தெரிவித்தார். 

வெளிநாட்டு போராளிகள் உட்பட 29 போராளிகள் கொல்லப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

மரியுபோலில் உள்ள வீரர்கள் சரணடைவதற்கான காலக்கெடுவை ஞாயிற்றுக்கிழமை காலை முதல் ஞாயிறு மதியம் வரை ரஷ்யா நீட்டித்துள்ளது.

No comments