பாதுகாப்பாக சொத்துக்கள் நகர்த்தப்படுகின்றது?

 


விசேட பாதுகாப்பு அணியினர் பாதுகாப்பு வழங்க, அந்த அணியின் மோட்டார் படையணி ​இருபுறங்களிலும் பயணிக்க, கடுமையான பாதுகாப்புடன் கொள்கலன் ஒன்று துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 0270586 என்ற இலக்கத்தை கொண்ட கொள்கலனே இவ்வாறு கொண்டு செல்லப்பட்டுள்ளது. “இந்த கொள்கலனுக்கு ஏன்? இந்த பாதுகாப்பு” என சமூக வலைத்தளங்களில் புகைப்படத்துடன் பதிவிட்டு கேள்வியெழுப்பியுள்ளனர்.

இதனிடையே அரசாங்கத்துக்கு எதிராக நாடளாவிய ரீதியில் இன்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

கொழும்பிலும் ஆர்ப்பாட்டங்கள் தொடந்து முன்னெடுக்கப்படுகின்றன. கொழும்பில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டம் ஒன்றுக்குள் சிறப்புப் படையணியின் மூன்று மோட்டார் சைக்கிள்கள் புகுந்துவிட்டன. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

“எங்களை சுடுவதற்காக வந்தீர்கள்” என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமெழுப்பினர். எனினும், கடமையிலிருந்த பொலிஸார், அந்த மோட்டார் சைக்கிள்களை திருப்பியனுப்பினர். ஆர்ப்பாட்டக்கார்களும் ஹூ சத்தமெழுப்பினர்.

No comments