உக்ரைனின் தாக்குதலில் உருக்குலைந்த மோஸ்கவா போர்க் கப்பல்!!


உக்ரைன் தாக்குதலில் உருக்குலைந்து கடலில் மூழ்கிய மோஸ்கவா போர்க் கப்பலின் புதிய காணொளி இணையத்தில் வெளியாகி பரவி வருகின்றன.

உக்ரைன் நகரங்களை தாக்க கருங்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சோவியத் கால போர்க் கப்பலான மோஸ்கவாவை நெப்டியூன் வகை ஏவுகணைகளை வீசி அழித்ததாக உக்ரைன் தெரிவித்தது.

உக்ரைனின் கூற்றுகளை மறுத்த ரஷ்யா, கப்பலில் தீ விபத்து ஏற்பட்டு மூழ்கியதாக கூறியது. இந்நிலையில் மோஸ்கவா போர்க் கப்பல் சேதமடைந்து இருக்கும் புதிய புகைப்படங்கள் மற்றும்  காணொளி இணையத்தில் வெளியாகி உள்ளன.  

No comments