கோத்தா கூப்பிட்டாலும் போகமாட்டோம்:சித்தர்!

அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு கைகோர்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்த அழைப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிராகரித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.

தமிழ்த் தேசிய கூட்டடமைப்பு இடைக்கால அரசில் எச்சந்தர்ப்பத்திலும் அங்கம் வகிக்க மாட்டார்கள். ஏனெனில் தமிழ்த் தேசிய கூட்;டமைப்பினை பொறுத்த மட்டில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான ஒரு நியாயமான தீர்வினை காண்பதே நோக்கமாகும் எனவும் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.


No comments