சாராயமுமில்லை:வருமானமும் இல்லை!
இலங்கையில் உள்ளூர் மதுபான உற்பத்திக்குத் தேவையான எத்தனோல் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள கடும் தடைகளே இதற்குக் காரணம் என நிதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.
இந்நிலை தவிர்க்கப்படாவிட்டால் கலால் வருவாயிலிருந்து அரச ஊழியர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்குவது உட்பட பல செலவுகளைச் செய்ய முடியாத நிலை ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
தற்போது, நாட்டிலுள்ள ஐந்து முக்கிய மதுபான ஆலைகளுடன் இணைந்து உள்ளூர் மதுபானங்கள் தயாரிக்கப்படுகின்றன. மேலும் அந்த தனியார் நிறுவனங்களும் அவற்றின் உற்பத்திக்கான கட்டுப்பாடுகள் குறித்து அவ்வப்போது எச்சரிக்கைகளை விடுத்துள்ளன.
எத்தனோல் உற்பத்திக்கான மூலப்பொருள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால், டொலர் தட்டுப்பாடு காரணமாக இறக்குமதி செய்ய தடை ஏற்பட்டுள்ளது.
Post a Comment