முதலில் கோ கோட்டா ஹோம் நானே தெரிவித்தேன்!
முதலில் கோ கோட்டா ஹோம் என நானே தெரிவித்தேன் தற்போது முழு நாடும் தெரிவிக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சவின் பெயர் முன்மொழியப்பட்டவேளை நான் அதனை வெளிப்படையாக நிரகரித்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வேளை பிரதமர் மகிந்த ராஜபக்சவும் அங்கு காணப்பட்டார் என அவர் தெரிவித்துள்ளார்.
கோத்தபாய ராஜபக்சவிற்கு எந்த அனுபவமும் இல்லை அவர் பிரதேச சபை உறுப்பினராக கூட இருந்ததில்லை இதன் காரணமாக கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவரை நியமிக்கவேண்டும் என நான் வேண்டுகோள் விடுத்தேன் என குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
எனினும் மகிந்த ராஜபக்ச அதனை ஏற்க விரும்பவில்லை அவர் அதனை தனது குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு வழங்க விரும்பினார்,அந்த பிழையான முடிவால் முழு நாடும் குழப்பத்தில் சிக்குண்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment