ரணில் புத்தாண்டின் பின்னர பிரதமர்!ஆட்சியை தக்கவைக்க ரணிலை பிரதமராக்கும் முயற்சி தெற்கில் முனைப்படைந்துள்ளது.புதுவருடத்தின் பின்னர் புதிய பிரதமரிற்கு தயாராக இருக்க மகிந்த தனது பணியாளர்களை கோரியிருந்தமை பரபரப்பினை தோற்றுவித்துள்ளது.

இதனிடையே ரணிலை பிரதமராக்கி தான் ஜனாதிபதி கதிரையில் அமர சம்பிக்க முற்பட்டுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக ஐக்கிய தேசிய கட்சி நேற்று முன்னெடுத்த போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவின் 43 பிரிகேட்டை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

ஐக்கியதேசிய கட்சியின் போராட்டத்தில் கலந்துகொண்ட 43வது பிரிகேட்டை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கரு பரணவிதான ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவை எதிர்கொள்வதற்கான பாரிய கூட்டணியை உருவாக்கும் நோக்கத்துடனேயே இந்த போராட்டத்தில் கலந்துகொண்டதாக தெரிவித்தார்.

பொதுவான எதிரணியொன்றை உருவாக்குவதே சம்பிக்க ரணவக்கவின் கொள்கை ஒரு பலம்பொருந்திய எதிர்கட்சி தலைவரின் முக்கியத்துவம் குறித்து ரணில் விக்கிரமசிங்கவிடமும் சஜித்பிரேமதாசாவிடமும் தெரிவித்துள்ளோம்- நாங்கள் ஐக்கியதேசிய கட்சியிடம் ஒரு கால் ஐக்கிய மக்கள் சக்தியில் ஒரு கால் என்ற அடிப்படையில் செயற்படவில்லை நாங்கள் பொதுவான எதிரணியொன்றை உருவாக்கும் முயற்சிகள் வெற்றிபெறுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
No comments