சிங்கள மக்களிற்கெதிராக சிறீலங்கா படையினர்!


இதுவரை காலமும் தமிழ் மக்களிற்கு எதிரதாகவும் முஸ்லீம்களிற்கு எதிராகவும் களமிறக்கப்பட்ட இலங்கை படைகள் தற்போது சிங்கள தேசத்தினை நோக்கி திரும்பியுள்ளன.

சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகத்தை கண்காணிக்க இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

எரிபொருள் நிலையங்களில் காத்திருக்கும் மக்கள் - பணியாளர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கபட்டே படையினர் இறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.


எரிபொருள் நிலையங்களில் காத்திருக்கும் மக்கள் வீதியால் செல்லும் அமைச்சர்களை தாக்கிவருவதுடன் எரிபொருள் நிலையங்களில் பணியாற்றுபவர்களையும் தாக்கிவருகின்றனர்.

இதனினையடுத்தே பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

எரிபொருட்களிற்காக மக்கள் காத்திருக்கும் இடங்களில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன என தெரிவித்துள்ள அமைச்சர் கொலையும் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
No comments