காஸ் மூன்றாவது தடவை!


இலங்கையில் அடுத்து வரும் மூன்று மாத காலத்தினுள் காஸ் விலை மூன்றாவது தடவையாக அதிகரித்துள்ளது.12.5 கிலோகிராம் எடை கொண்ட வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை குறைந்தது 750 ரூபாவால் அதிகரிக்கப்பட உள்ளதாகத் தெரியவருகிறது.

சர்வதேச எரிவாயு விலை உயர்வு, கப்பல் போக்குவரத்து செலவு அதிகரிப்பு மற்றும் டாலர் விலை உயர்வு போன்ற காரணங்களால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக நிறுவனங்களின் வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போது, ​ஒரு எரிவாயு மெட்ரிக் தொன் ​​900  டொலராக உயர்ந்துள்ளது மற்றும் கப்பல் செலவுகள் 31% அதிகரித்துள்ளன.

இந்த நிலைமைகள் காரணமாகவே எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி தற்போது 2750 ரூபாவாக உள்ள 12.5 எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3500 ரூபாவுக்கு மேல் அதிகரிக்கப்படவுள்ளது.

எவ்வாறாயினும், விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப் படவில்லை என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

No comments