இலங்கை நாடாளுமன்றில் பால் இல்லை!



நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான  சிற்றுண்டிச்சாலையில் திரவப் பால் உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அதன் அதிகாரிகளுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து நாடாளுமன்றத்தின் உணவு வழங்கல் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், விநியோகஸ்தர்கள் சுமார் ஒரு மாதமாக நாடாளுமன்றத்துக்கு திரவப் பாலை வழங்கவில்லை என்று கூறினார்.

தொடர்ந்து மில்கோ நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்தும் போதிய அளவு பால் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

மேலும்,  போத்தல்களில் அடைக்கப்பட்ட சில பானங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக நாடாளுமன்ற உணவு வழங்கல் பிரிவு தெரிவித்துள்ளது.

தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக சில உணவுப் பொருட்களை பாராளுமன்றத்துக்கு வழங்குவதில் தடை ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.


No comments